கொரோனா பரவல் முடிவுக்கு வந்து விட்டதாக 2022இல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. மக்களும் முன்புபோல் இயல்பாக வாழ்கின்றனர். இந்நிலையில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், தொற்று மீண்டும் பரவுகிறதா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. ஒருவேளை தொற்று பரவினால், மக்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.