சிறுநீரை சில நிமிடங்களில் குடிநீராக மாற்றும் 8 கிலோ எடை கொண்ட விண்வெளி உடையை நியூயார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். விண்வெளியில் இருப்பவர்களின் கழிவுகள் டயப்பரில் சேகரிக்கப்பட்டு, பூமியின் வளிமண்டலத்தில் எரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மணி நேர விண்வெளி நடைபயணத்திற்கு மட்டுமே இது சிறந்த தீர்வாக அமையும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.