பிஹாரின் பல்வேறு மாவட்டங்களிலும் மின்னல் தாக்கிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இன்று மட்டும் 25 பேர் பலியாகினர். 39 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஜூலையில் பிஹாரில் மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 25 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் நிதிஷ்குமார், மக்களை வீடுகளுக்குள் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.