விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் இருவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கலைஞருக்கு எதிராக சீமான் வாய்க்கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த பேச்சு தொடருமானால், அவரின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும். சீமான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.