விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 10ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் 35,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர், அங்கிருந்த பொது மக்களுக்கு அவர்கள் இனிப்புகள் வழங்கினர். அறிவாலய வளாகத்தில் நடனமாடியும். பாடல் பாடியும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.