தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.