சண்டாளன் என்ற வார்த்தை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். மேலும் சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி. சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பது எனக்கு தெரியாது. வழக்கு மொழியாக தான் பேசினேன். கந்தசஷ்டி கவசத்தில் கூட சண்டாளர்கள் எனும் வார்த்தை இடம்பெற்றுள்ளது. அதிமுக மேடைகளில் கருணாநிதி பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்ட போது திமுகவினர் எங்கே சென்றனர்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.