நாகரீக அரசியலை பற்றி பேசுவதற்கு துளியும் அருகதையற்ற கட்சி திமுக என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சண்டாளன் என்பது கிராமப்புறங்களில் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய வார்த்தை. சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை எழுதி வெளியிட்டது அதிமுகதான். அவதூறு பேச்சின் ஆதித்தாய் திமுக. கந்த சஷ்டி கவசத்தில் கூட சண்டாளன் என்ற வார்த்தை உள்ளது என்றார்.