கருணாநிதிக்கு எதிராக பேசிவரும் சீமானுக்கு விரைவில் பாடம் புகட்டப்படும் என்று, அமைச்சர் சேகர் பாபு எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, இதேபோன்று கருணாநிதியை விமர்சித்ததற்கு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதையும் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளதாகவும், விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.