எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்பதை மக்கள் உணர்த்தியுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றி குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும் எனக் கூறியுள்ளார்.