விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்ற நிலையில், பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது என்று ராமதாஸ் விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் பொன்முடி பாமக எப்போதும் நேரத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் என்று பதிலடி கொடுத்துள்ளார். எதிர்க்கட்சி என்றாலே வெற்றி பெற்றவர்கள் மீது ஏதாவது குறை சொல்வது வழக்கமானதுதான் எனக் கூறிய அவர், தேர்தலில் மாறிமாறி கூட்டணி வைக்கும் ராமதாஸுக்கு, கொள்கைகள் கிடையாது என்று விமர்சனம் செய்தார்.