புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா 2024 இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வகையிலும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், இன்று அமலுக்கு வந்துள்ளது.