விஜய்யின் தவெக கட்சியுடன் கூல் சுரேஷின் கட்சி (CSK) கூட்டணி அமைப்பது உறுதி என அக்கட்சித் தலைவரும் நடிகருமான கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கிறேனோ அந்த கட்சி கண்டிப்பாக ஆட்சியமைக்கும் என்ற அவர், 2026ல் TVK தலைவர் விஜயும், CSK தலைவர் கூல் சுரேஷும் இணைந்து மக்களுக்கு நன்மைகள் செய்வோம் என்றார். மேலும், கூல் சுரேஷை விரைவில் தமிழக சட்டப்பேரவையில் பார்ப்பீர்கள் என்றார்.