இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 92 புள்ளிகளுடன் வறுமை ஒழிப்பில் முதலிடம், 81 புள்ளிகளுடன் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 2ஆவது இடம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் 78 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.