பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல், தாக்குதல்கள் சமீப நாள்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரண் கிராமத்தில் ரோந்து சென்ற ராணுவத்தினர், அங்கு ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.