முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோரலாம் என்ற தீர்ப்பு, முஸ்லிம் சட்டத்துக்கு எதிரானது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து சட்ட வழிமுறைகளும் ஆராயப்படும் எனவும் அந்த வாரியம் கூறியுள்ளது. சிஆர்பிசி சட்டப்பிரிவு 125இன் கீழ், விவாகரத்துப்பெற்ற முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.