ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் சத்யா(35) என்பவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மொபைல் ஆப் மூலம் ஆண்களிடம் நெருங்கி பழகும் இவர், இதுவரை 53 ஆண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தற்போது போலீசார் இவரை கைது செய்துள்ளனர். வாலிபர்கள் தொடங்கி விஐபிக்கள் வரை பலர் சத்யாவின் வலையில் விழுந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.