பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக டைட்டானிக் போல் மூழ்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும். இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக நிரந்தரமாக மூழ்குவதற்கான விரிசல்கள் விழுந்து வருவதையே குறிக்கிறது என பதிவிட்டுள்ளார்.