ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை (செப்.4 முதல் 7 வரை) விளையாட உள்ளது. அதை முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு சென்று 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் (செப்.11 முதல் 29 வரை ) விளையாடுகிறது. இப்போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக செயல்படுவார். ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான டி20 அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் இளம் கூப்பர் கோனாலி ஆகியோரை ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருவதால், டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார்.
ஆஸ்திரேலியா டி20 அணி:
மிட்செல் மார்ஷ் (கே), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் ஸ்டோனிஸ்,
ஆடம் ஜம்பா.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி:
மிட்ச் மார்ஷ் (கே), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.