இந்தியாவின் மொத்த ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 5.40% உயர்ந்து, $200.33 பில்லியனாக அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த இறக்குமதி 6.29% அதிகரித்து, $222.89 பில்லியனாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நகைகளின் இறக்குமதி $33.66 பில்லியனில் இருந்து, $36.04 பில்லியனாகவும், ஏற்றுமதி $25.29 பில்லியனில் இருந்து $27.43 பில்லியனாகவும் உயர்ந்துள்ளது.