இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி junior consultant பணிக்கென மொத்தம் 25 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் post graduate degree, BE, B.Tech, master degree போன்றவைகளில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் அதிகபட்ச வயது 45-க்குள் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு interview மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.80,250 ஊதியமாக வழங்கப்படும். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SAI ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்ப படிவத்தினை பெற்று அதை பூர்த்தி செய்து அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.