கேரளாவில் மருத்துவ பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ரவிந்திரன் (59) என்ற முதியவர் 2 நாட்களாக LIFT-ல் சிக்கி தவித்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் பலமுறை அலாரம் பட்டனை அழுத்தியும் உதவ யாருமில்லாமல் இருந்துள்ளார். திங்கட்கிழமை LIFT ஊழியர் பணிக்கு வந்த பிறகே ரவிந்திரன் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், LIFT OPERATORS உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.