பாஜகவின் தவறான கொள்கையால் ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். டோடாவில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவர், தொடர் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அத்துடன், பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.