தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் 2 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.