பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் நீதிபதி கருணாநிதி உயிரிழந்துள்ளார். சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த பைக் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய அவர், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.