சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி பூஜா கெட்கர், மகாராஷ்டிரா மாநிலத்தின் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 23ஆம் தேதி முசோரியில் உள்ள பயிற்சி அகாடமிக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். சொந்த காரில் சைரன் பயன்படுத்தியது, கூடுதல் வசதிகள் கேட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், அவரது பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.