மின்கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜூலை 23ஆம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். மின்கட்டண உயர்வு மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கும் பருப்பு, பாமாயிலை நிறுத்தும் முயற்சியை கண்டித்தும் அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 23ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடக்கும் போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்ளவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.