இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.