திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனம் விருப்ப ஓய்வு வழங்கிய நிலையில் தொழிலாளர்கள் வெளியேற விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று மாஞ்சோலை பகுதிகளில் ஊர் பொதுமக்கள் பெயரில் வைத்துள்ள பேனரில், மாஞ்சோலை எஸ்டேட்டுகளை அரசு எடுத்து நடத்த வேண்டும், 10 ஏக்கர் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாஞ்சோலையில் நிலம் வழங்க வேண்டும். தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.