கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜூலை 25ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. CPM மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துதல், மின்சாரக் கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.