ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள். எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்புப்படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். மாயமானவர்களை மீட்க இந்திய கடற்படை கப்பல் விரைந்துள்ளது.