தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் ஜூலை 20 விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பணிக்காக கடந்த ஆண்டு ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் இயங்கியது. இரண்டு நாட்கள் பணிக்காலத்தை ஈடு செய்யும் வகையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வருகின்ற ஜூலை 20ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.