திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத ஆர்ஜித சேவைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இன்று காலை 10 மணி முதல் ஜூலை 20ஆம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்திய டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அங்கபிரதட்சனை இலவச டோக்கன்கள் ஜூலை 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.