தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சி காலத்தில் வருவாய் துறை மேற்கொண்ட பணிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தி 34.90 லட்சம் பேருக்கு தற்போது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 80 ஆயிரம் முதியோருக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.