நில மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.