உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில், 4 ஏ.சி. பெட்டிகள் உள்பட 12 பெட்டிகள் தடம்புரண்டன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.