வேலையில்லா திண்டாட்டம் என்பது இந்தியாவில் நீண்ட கால பிரச்சனையாக இருந்து வருகின்றது. போதிய அளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் தற்போது பல மாநிலங்களில் நிரூபணமாகி வருகிறது. குஜராத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வெறும் 18 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்ட சம்பவம் பெரும் வேலையில்லா திண்டாட்டத்தின் கோர முகத்தை காட்டியது.
மேலும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உள்ள 2,216 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்விற்கு வருகை தந்த சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் நெரிசலில் சிக்கி தவித்தது, இந்தியாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.