இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இருசக்கர மின் வாகனங்களுக்கு ₹10,000, ஆட்டோக்களுக்கு ₹25,000 மற்றும் கார்களுக்கு ₹50,000 மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. இந்த மானிய திட்டம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.