உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு பிரதமர் மோடியும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தானியங்கி சிக்னல் தோல்வி, நிர்வாகத்தில் பல குளறுபடிகள், வாக்கி – டாக்கி போன்ற முக்கிய பாதுகாப்பு கருவிகள் கிடைக்காதது போன்ற குறைபாடுகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.