துபாய் இளவரசி ஷைகாவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஷேக் மனா என்பவரிடம் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் இளவரசி ஷைகா அவருடைய கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸடாகிராமில் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் பிற துணைவிகளுடன் எப்போதும் சேர்ந்திருப்பதால் உங்களுடனான மண வாழ்க்கையில் இருந்து பிரிவதை இதன் மூலம் அறிவிக்கிறேன். உங்களை விவாகரத்து செய்கிறேன் என்று கூறியுள்ளார்.