அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அடங்கிய புரோட்டீன் பவுடர் விற்றதை எதிர்த்து புகாரளித்த இளைஞருக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.1.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ராகுல் ஷெகாவத் என்பவர் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.1,599-க்கு புரோட்டீன் பவுடரை வாங்கினார். புரோட்டீன் பவுடர் நிறுவனம் தவறான தகவல்களை அளித்து நுகர்வோரை தவறாக வழிநடத்தியதாக நீதிமன்றம் கண்டறிந்தது. இது குறித்த வழக்கில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.