ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்பிருப்பதாக, சந்தேகத்தின்பேரில் பாஜகவின் அஞ்சலை, அதிமுகவின் மலர்கொடி, தமாகாவின் ஹரிஹரன் ஆகியோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், கொலைக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் திமுகவை சேர்ந்த சதீஷ் இதுவரை கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. இது, விமர்சனமாக மாறியுள்ள நிலையில், விரைவில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.