மருத்துவமனையில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிரபல ரவுடி சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக மாதம் ஒருமுறை சென்னை வந்து செல்பவர் பிரபல ரவுடி. ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஒரு மாதம் முன்பு 3 முறை சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை சந்தித்தது யார் என விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.