அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஜுலை 24ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. தேனியில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிககள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பழனிசெட்டிப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் வரும் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.