பாதி சம்பளம், ஆட்குறைப்பு செய்து அம்மா உணவகத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அம்மா உணவகத்தில் காலை-மாலை உணவு கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும், 9 பேர் வேலை செய்யும் உணவகத்தில் 4 பேர் மட்டுமே வேலை செய்யும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு, மின்கட்டண உயர்வு பிரச்னைகளை திசைதிருப்பும் வகையில் ஆய்வு என்ற பேரில் ஒருநாள் கூத்து நடத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்றும் கூறியுள்ளார்.