வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இரு ஒரு சில இடங்களில் 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் அதிகமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.