2026-ஆம் ஆண்டில் உங்களது அரசியல் நிலைப்பாடு மாறுமா? அல்லது இதேதான் தொடருமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, மக்களோட பிரச்சனை மாறும்னு நெனச்சு தான் திமுகவுக்கு ஓட்டு போட்டேன்… ஆனால் தனது முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கும் என்றும், ஆனால் இது ஒரு எச்சரிக்கை தான் என்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருப்பது, பல யூகங்களை கிளப்பியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப்பிறகு, அரசியல் ரீதியில் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, வரும் தேர்தலில் கட்சி மாறி வாக்களிக்கவே அவர் இவ்வாறு சூசகமாக பேசியிருப்பதாக பரவலாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக நாளை அவர் பேரணி நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.