வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதனால் சென்னை, கடலூர், எண்ணூர், தூத்துக்குடி, பாம்பன், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.