சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கேப்டன் பிரிஜேஷ் தாபா வீரமரணம் அடைந்தார். சமீபத்தில் அவரது உடல் மேற்கு வங்கத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லெபாங்கிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பெற்றோர் கண் கலங்கினர். ராணுவ வீரரான தங்கள் மகனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர்கள், ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கம் எழுப்பினர்.