எம்பி தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 10ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் ஜூலை 24ஆம் தேதி தேனி, ஆரணி, ஜூலை 25ஆம் தேதி தென்காசி மற்றும் ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. காலை மாலை என இரண்டு வேளைகளிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.